தடுப்பணையில் வழிந்தோடும் காவிரிநீர்: விவசாயிகள் ஆனந்த கண்ணீர்!

தடுப்பணையில் வழிந்தோடும் காவிரிநீர்: விவசாயிகள் ஆனந்த கண்ணீர்!
X

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர், ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு வந்து, ஆகாயத்தாமரைகளுடன் வழிந்தோடுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரிநீர், பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் தடுப்பணையை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து, கடந்த 13ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவிரிநீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீரால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட 12 காவிரி பாசன மாவட்டங்களில் மொத்தம் 17.32 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டு, படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், தண்ணீர் பரமத்திவேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் தடுப்பணையை வந்தடைந்தது.

இதனால், தடுப்பணை நிறைந்து தண்ணீர் வழிந்தோடுவது ரம்மியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைவில் ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜா வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிகிறது.

Tags

Next Story