பாண்டமங்கலத்தில் 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

பாண்டமங்கலத்தில் 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X

மாணவர் பரத் (பழைய படம்)

நன்றாகப் படிக்கச்செல்லி பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்து 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பரமத்திவேலூர் தாலுக்கா பாண்டமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அரசகுமார் (45). இவர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு பரத் (14) என்ற மகன் இருந்தார். இவர் பாண்டமங்கலம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

பரத் படிப்பில் கவனம் செலுத்தாததால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பெற்றோர்கள் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர். இதனால் பரத் சிலநாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்மபவத்தன்று காலை வீட்டில் இருந்த பரத் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள விட்டத்தில் நைலான் கயிற்றால் பரத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா