எருமப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டவர் கைது..!

எருமப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில்  அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டவர் கைது..!

பிரச்சினைக்குள்ளான எருமப்பட்டி, அரசு தொடக்கப்பள்ளி சமையலறை.

எருமப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்,

எருமபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலராக பணிபுரியும் கார்த்தீஸ்வரி மற்றும் கமலாபதி ஆகியோர் கடந்த 2ம் தேதி, காலை 6.45 மணியளவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல் செய்வதற்காக வந்த போது, பள்ளி சமையலறையின் கதவு மற்றும் பூட்டில் அடையாளம் தெரியாத யாரோ மனித கழிவுகளை பூசியும், அருகில் உள்ள சுவரில் அசிங்கமான வார்த்தைகளை எழுதியும், ஆபாசமான படங்களை வரைந்தும் உள்ளதைப் பார்த்துள்ளார். இது குறித்து பள்ளி தலைமையாசிரியருக்கு தகவல் கூறியுள்ளனர். தலைமையாசிரியர் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு, பின்பு எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் துரைமுருகன் (25) என்பவருக்கும், அந்த பள்ளியில் சமையலர்களாக பணிபுரிந்து வரும் கார்த்தீஸ்வரி மற்றும் கமலாபதி என்பவர்களுக்கும் இருந்த முன்விரோதம் காரணமாக, அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 1ம் தேதி ஞாயிற்றுகிழமை பள்ளி விடுமுறை என்பதால் காலை 6 மணிக்கு பள்ளியின் காம்பவுன்ட் சுவர் எறிக் குதித்து, பள்ளியின் உள்ளே சென்று காலி நிலத்தில் மலம் கழித்து அதனை எடுத்து பள்ளியின் சமையலறை கதவு மற்றும் பூட்டில் பூசியும், அருகில் கிடந்த சிகப்பு கலர் கிரயான் பென்சிலை எடுத்து அருகில் உள்ள சுவரில் ஆபாசமான வார்த்தைகளை எழுதியும், அருவருக்கதக்க படத்தை வரைந்துள்ளது தெரிய வந்தது. இதை துரைமுருகன் ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில், போலீசார் துரைமுருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

இது போன்று அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை செய்துள்ளார்.

Tags

Next Story