/* */

நாமக்கல் லோக்சபா தொகுதியில் 8,526 வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு: மொத்த வாக்காளர் 14,52,562 பேர்

Namakkal news-நாமக்கல் லோக்சபா தொகுதியில் 8,526 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதால், மொத்த வாக்காளர் 14,52,562 பேர் என அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் லோக்சபா தொகுதியில் 8,526 வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு: மொத்த வாக்காளர் 14,52,562 பேர்
X

Namakkal news-நாமக்கல் லோக்சபா தொகுதியில் 8,526 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் ( நாமக்கல் தொகுதி வரைபடம்) 

Namakkal news, Namakkal news today- நாமக்கல் லோக்சபா தொகுதியில், புதியதாக 8,526 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து, 52 ஆயிரத்து, 562 ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், 2023, அக்., 27 ல், வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டது. அதில், மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என 6 சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள், 14 லட்சத்து, 19 ஆயிரத்து, 643 பேர்.

தொடர்ந்து, 28 ஆயிரத்து 892 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதையடுத்து, கடந்த, ஜன. 22ல் மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து, 32 ஆயிரத்து 307 பேர். தற்போது, லோக்சபா தேர்தலையொட்டி, 18 வயது நிரம்பியவர்கள், விடுபட்டவர்கள் என, 8,629 பேர் வாக்காளர் பட்டியில் புதியதாக பெயர் சேர்க்கப்பட்டனர். அதையடுத்து, தற்போதைய நிலவரப்படி, மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள், 14 லட்சத்து, 40 ஆயிரத்து, 996 பேர்.

நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர் திருச்செங்கோடு என, 6 சட்டசபை தொகுதியில், 14 லட்சத்து, 44 ஆயிரத்து, 36 பேர் வாக்காளர் பட்டியில் இடம் பெற்றிருந்தனர்.

லோக்சபா தேர்தலையொட்டி, புதிதாக, 8,526 பேர் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, தற்போதைய நிலவரப்படி, நாமக்கல் லோக்சபா தொகுதியில், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து, 52 ஆயிரத்து, 562 பேர் என அதிகரித்துள்ளது.

Updated On: 4 April 2024 11:30 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமான வாக்குப்பதிவு
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த பெண்...
 3. திருவண்ணாமலை
  சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
 4. ஆரணி
  ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
 5. குமாரபாளையம்
  ஈரோடு நாடாளுமன்ற தொகுதி குமாரபாளையத்தில் 74.06 சதம் ஓட்டுப்பதிவு
 6. இந்தியா
  சொந்தமாக ஒரு கார் கூட இல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா
 7. லைஃப்ஸ்டைல்
  பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் பயன்கள்
 8. லைஃப்ஸ்டைல்
  ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
 9. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
 10. ஈரோடு
  பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!