நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய நாமக்கல் மாவட்ட கலெக்டர்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட  உதவி வழங்கிய நாமக்கல் மாவட்ட கலெக்டர்
X

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டுப்புறக்கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் 9 பேருக்கு ரூ. 63 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் சார்பில், 9 பேருக்கு ரூ. 63 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து, தகுதியான 941 பேருக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே 10 நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு, ரூ. 1.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.

இதையொட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள உள்ள 9 நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு, ரூ. 63 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார். வாரிய உறுப்பினர்கள் முருகன், செல்வராஜ், கலியபெருமாள், வெங்கடேஷ், குமாரசாமி ஆகியோரது வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, பாலசுப்ரமணியன் என்பவரின் மகள் விவேகாவிற்கு கல்லூரி ஹாஸ்டல் கட்டணம், நாகராஜன், தங்கவேலு ஆகியோரது மறைவிற்கு இயற்கை மரண உதவித்தொகை ஆகியவை நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன. டிஆர்ஓ சுமன், தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய நிர்வாகக்குழு உறுப்பினர் பிரபு உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story