நாமக்கல்லில் தீபாவளியையொட்டி களை கட்டியது ஜவுளி, பட்டாசு விற்பனை

நாமக்கல்லில் தீபாவளியையொட்டி களை கட்டியது  ஜவுளி, பட்டாசு விற்பனை
X

கழுகு பார்வையில் நாமக்கல் கடைவீதி.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் ஜவுளி மற்றும் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் பொதுமக்கள் கூட்டம் களைகட்டியது. ஜவுளி மற்றும் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாளை தீபாவளி என்பதால் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர். இதனால் பஸ்,ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நெடுஞ்சாலைகளில் கார்கள், வேன்கள் மற்றும் டூ வீலர்களில் ஏராளமானவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டனர்.

நாமக்கல் மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான தற்காலிக ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீதி தோறும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தீபாவளி இறுதிகட்ட விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜவுளிகள் மற்றும் பட்டாசுகள் வாங்கவும், இனிப்பு, கார வகைகள், செருப்புகள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்காகவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நகருக்குள் வந்ததால், நாமக்கல் மெயின்ரோடு, கடை வீதி, கோட்டை ரோடு, சேலம் ரோடு, பஸ் ஸ்டேண்டு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தினறினார்கள். நேற்று காலை முதல் நள்ளிரவு வரை ஜவுளி மற்றும் பட்டாசு கடைகளில் விற்பனை களைட்டியது.

Tags

Next Story