நாமக்கல்லில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா கோலாகலம்..!
நாமக்கல்லில் நடைபெற்ற வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவில், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
/நாமக்கல்லில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா கோலாகலம்
நாமக்கல் :
நாமக்கல் நகரில், இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், கப்பலோட்டிய தமிழன் என மக்களால் அன்போடு அழைக்கப்படும் வ.உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
அனைத்திந்திய முதலியார், பிள்ளைமார் சங்கம் , பாவேந்தர் பாரதி தாசன் பேரவை மற்றும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல் கலந்து கொண்டு பேசியபோது, வ.உ.சியின் தியாகங்கள், தேசத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஒரே ஒரு தேசிய தலைவர், நாட்டு விடுதலைக்காக தன் சொத்துக்களை, குடும்பத்தை இழந்து, கோவை சிறையில் செக்கிழுத்த செம்மலின் தியாகத்தை, அர்ப்பணிப்பை இளைய தலைமுறைக்கு கற்பிப்போம் என கூறினார்.
விழாவில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க மண்டல செயலாளர் பசுமை தில்லை சிவக்குமார், மாவட்ட தலைவர் வெங்கடகுமார், துணைத் தலைவர் அரசுபரமேஸ்வரன் , இணைச் செயலாளர் முத்து சிவஞானம்பிள்ளை, திலக், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் பேரவை தலைவர் கருப்பண்ணன், மதியழகன், செயலாளர் ரகோத்தமன், துணைச் செயலாளர் மருதமுத்து, பொருளாளர் ஆசிரியர் ஆறுமுகம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை தலைவர் சுரேஷ், வக்கீல் நாகராஜன், குணசேகரன் மற்றும் திளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu