சிப்காட் விவகாரம்: தேர்தல் விதிமுறை மீறி பிரச்சாரம் செய்வதாக விவசாயிகள் புகார்

சிப்காட் விவகாரம்: தேர்தல் விதிமுறை மீறி  பிரச்சாரம் செய்வதாக விவசாயிகள் புகார்

Namakkal news- சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளிப்பதற்காக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, மோகனூர் பகுதியைச் சேர்ந்த திரளான விவசாயிகள் வந்திருந்தனர்.

Namakkal news- சிப்காட் விவகாரத்தில் தேர்தல் விதிமுறை மீறி பிரச்சாரம் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Namakkal news, Namakkal news today- மோகனூர் பகுதியில் அமைக்கப்பட உள்ள சிப்காட் திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்துவது தொடர்பாக தேர்தல் விதிமுறை மீறி திமுகவினர் பிரச்சாரம் மேற்கொள்வதாக கூறி அப்பகுதி விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மோகனூர் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை 56 கட்டமாக போராட்டங்கள் நடத்தியும், திட்டத்தைக் கைவிடக்கோரி பிரதமர், முதல்வர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனுக்களும் அனுப்பியுள்ளோம்.

இந்த நிலையில், திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திங்களில் சிப்காட் திட்டத்திற்காக 400 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதற்கு சந்தை மதிப்பைவிட கூடுதல் விலை கொடுக்கப்படும் எனக் கூறி தேரத்ல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுகிறது. இத்திட்டத்தை கைவிட்டு வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை பற்றி பேசுவதற்கும் தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags

Next Story