நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விறுவிறுப்பான விற்பனை..!

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  விநாயகர் சிலைகள் விறுவிறுப்பான விற்பனை..!

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாமக்கல் பார்க் ரோட்டில், பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாமக்கல் நகரில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விறுவிறுப்பான விற்பனை

நாமக்கல் :

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாமக்கல் நகரில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

நாளை செப். 7ம்தேதி, இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. 7ம்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் விநாயகர் சிலைகள் விசஜசன ஊர்வலம் நடத்தப்பட்டு கடல், ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்படு(ம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் நகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டும் ஏராளமானோர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு நாமக்கல் பூங்கா சாலை, மெயின் ரோடு, கடைவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில், பல்வேறு வர்ணங்களில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் வைக்கக் கூடிய விநாயகர் சிலைகள் சுமார் 10 அடி உயரம் வரை உருவாக்கப்பட்டுள்ளன. வீடுகளில் வைக்கக்கூடிய ஒரு அடி முதல் 3 அடி உயரம் வரை பல்வேறு அளவுகளில், விநாயகர்கள் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. கோர்ட் மற்றும் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் பேரில் நீரில் கரையக்கூடிய செயற்கை வர்ணங்கள் இல்லாத விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கிச் செல்கின்றனர்.

Tags

Next Story