கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா பசுமை திருவிழாவாக நடைபெறும்: கலெக்டர்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா பசுமை திருவிழாவாக நடைபெறும்: கலெக்டர்

கொல்லிமலையில் நடைபெற உள்ள, வல்வில் ஓரி விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் உமா பேசினார்.

தமிழக அரசின் சார்பில் வரும் ஆகஸ்ட் 2, 3ல், கொல்லிமலையில் நடைபெற உள்ள வல் வில் ஓரி விழா பசுமை திருவிழாவாக நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் வரும் ஆகஸ்ட் 2, 3ல், கொல்லிமலையில் நடைபெற உள்ள வல் வில் ஓரி விழா பசுமை திருவிழாவாக நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல் கலெக்டர் ஆபீசில், தமிழக அரசின் சார்பில், வருகிற ஆக. 2, 3 தேதிகளில், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சி என, முப்பெரும் விழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் சிறப்பை போற்றிடும் வகையில், ஆண்டு தோறும், ஆடி, 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள், தமிழக அரசு சார்பில், வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், இந்த ஆண்டும், வரும், ஆக. 2 மற்றும், 3ல் என, ஆகிய 2 நாட்கள் அரசின் சார்பில், வல்வில் ஓரி விழா, கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவில், அனைத்து அரசுத்துளைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட வேண்டும். வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சி விழாவை, பசுமை திருவிழாவாக நடத்த துறை அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முழுஈடுபாட்டுடன் மேற்கொண்டு விழாவை நடத்த வேண்டும்.

மாவட்ட போலீசார், வல்வில் ஓரி அரங்கிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, போதைப் பொருள் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வில்வித்தை சங்கம் சார்பில், வில்வித்தை விளையாட்டு போட்டி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வன அலுவலர் கலாநிதி, டி.ஆர்.ஓ., சுமன், கூட்டுறவு சங்க இணைபதிவாளர் அருளரசு, ஆர்.டி.ஓ. பார்த்தீபன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story