ராஜ்யசபாவில் ராஜேஷ்குமார் கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்

திமுக ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார்.
தமிழ்நாட்டின் நெடுஞ்சாலை திட்டங்களுக்காக மத்திய அரசு இந்த ஆண்டு ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யும் என, ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமாரின் கேள்விக்கு, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார்.
புதுடெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதத்தில் திமுக ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கலந்துகொண்டு, கேள்வி நேரத்தில் பேசியதாவது:-
2023 மற்றும் 2024 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு நெடுஞ்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது ரூ. 657.53 கோடி மட்டுமே. இது தமிழ்நாட்டுக்கு போதுமான நிதி இல்லை. எனவே தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட தொகையாக சுமார் ரூ. 2,000 கோடியை நடப்பு நிதி ஆண்டில் எந்த குறையும், காலதாமதமும் இல்லாமல் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி வழங்குவதில் நாங்கள் எந்தவித வரையறையும் வைத்திருக்கவில்லை. 2 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமல்ல, நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டங்களுக்காக ரூ. 5000 கோடியை கூட ஒதுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏற்கனவே இதுகுறித்து நாங்கள் பல்வேறு முடிவுகளையும் மேற்கொண்டு உள்ளோம். இருப்பினும் இதுதொடர்பாக நீங்கள் அதற்கான பரிந்துரைகளையும், நிலம் கையகப்படுத்துதலையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu