நாமக்கல் புதிய பஸ் நிலைய கடைகள் ஏலத்தை வெளிப்படையாக நடத்த வியாபாரிகள் கோரிக்கை

நாமக்கல் புதிய பஸ் நிலைய கடைகள் ஏலத்தை  வெளிப்படையாக நடத்த வியாபாரிகள் கோரிக்கை

Namakkal News- நாமக்கல் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்தார்.

Namakkal News- நாமக்கல் புதிய பஸ் நிலைய கடைகள் ஏலத்தை வெளிப்படையாக நடத்த வியாபாரிகள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Namakkal News, Namakkal News Today- நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் நிலைய கடைகள் ஏலத்தை வெளிப்படையாக நடத்தவேண்டும் என, மாநகராட்சி கமிஷனரிடம் வணிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுள்ள மகேஸ்வரியை, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் நகராட்சி கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் மாணிக்கம், நாமக்கல் மாவட்ட செல்போன் அசோசியேசன் தலைவர் பத்மநாபன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது, வணிக உரிமத்தினை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் மற்றும் நகராட்சி கடைகளின் ஒப்பந்த காலத்தினை 12 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவது தொடர்பாக தமிழக முதல்வர் அறிவித்தது, நகர நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் புதிய பஸ் நிலைய கடைகளின் பொது ஏலத்தினை, மாநகராட்சி வெளிப்படையாக நடத்திட வேண்டும் என வணிகர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அறிவுசார் மையம் மற்றும் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க முதல்கட்டமாக ரூ. 30,000 நன்கொடை வழங்குவதாகவும், நகர வளர்ச்சி மற்றும் வணிகர் நலன் சார்ந்து மாநகராட்சி முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது மாநகராட்சி துப்பரவு அலுவலர் திருமூர்த்தி, நாமக்கல் நகராட்சி கடை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கருணாகரன், பொருளாளர் முரளி, செல்போன் அசோசியேசன் நகர தலைவர் ரிஸ்வான், செயலாளர் ராஜா, பேரமைப்பின் மாவட்ட இணை செயலாளர் உதயகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவன், இளைஞர் அணி இணை அமைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story