31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டை முற்றுகை: டிட்டோஜாக் கூட்டத்தில் தீர்மானம்
Namakkal News- நாமக்கல்லில் நடைபெற்ற டிட்டோஜாக் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசினார்.
Namakkal News, Namakkal News Today- 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கோட்டையில் நடைபெறும், முற்றுகை போராட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 1,000 பேர் பங்கேற்பது என டிட்டோஜாக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்ட டிட்டோஜாக் வேலைநிறுத்த போராட்ட ஆயத்தக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச்செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச்செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலாளர் கலைச்செல்வன் வரவேற்றார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக செல்வராசன், ஆசிரியர் கூட்டணி மாநிலத்துணை பொதுச்செயலாளர் அருள்மணி ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர். கூட்டத்தில், புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான சம்பளம் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியருக்கு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட, 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 10ம் தேதி நடைபெற உள்ள ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. மேலும் வரும், 29, 30, அக். 1ல் ஆகிய 3 நாட்கள் சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பேர் பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu