நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு  மதிப்பூதியம் வழங்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Namakkal news- முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு. (கோப்பு படம்)

Namakkal news- நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை எழுந்துள்ளது.

Namakkal news, Namakkal news today- அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு, பள்ளிக்கல்வித் துறை அரசு செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்காகு மார்ச் 25ம் தேதி முதல் மே 2ம் தேதி நீட் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி மையத்திற்கு முதுகலை ஆசிரியர்கள் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு நீட் பயிற்சிக்காக நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு எவ்வித மதிப்பூதியமும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு மணி நேரத்துக்கு மதிப்பூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த மதிப்பூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் விடைத்தாள் திருத்தச் செல்லும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தியதற்கான உழைப்பூதியம் வழங்கப்படுகிறது.

இதுபோல் மாநிலம் முழுவதும் நீட், ஜேஇஇ பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கு தனியாக மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும். ஜேஇஇ, சியூஇடி போன்ற மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணம் போன்றவை மாணவர்களுக்கு திருப்பி வழங்கப்படுவது போல நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படவேண்டும். சனிக்கிழமைகளில் பயிற்சி இருக்கும் பொழுது பயிற்சி ஆசிரியர்களுக்கு அதற்கான ஈடு செய்யும் விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும். மாவட்ட அளவிலான நீட், ஜேஇஇ கோடை பயிற்சியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ,தேநீர், மதிய உணவு போன்றவை பல்வேறு மாவட்டங்களில் முறையாக வழங்கப்படவில்லை. அவற்றை முறையாக அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட். ஜேஇஇ எழுத விரும்பும் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டில் தொடக்கத்திலிருந்தே முறையாக பயிற்சியளிக்க வேண்டும். இப்பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு, நீட் கையேடுகள் வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story