நாமக்கல்லில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா கோலாகலம்

நாமக்கல்லில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய  ஷோரூம் திறப்பு விழா கோலாகலம்

நாமக்கல்லில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூமை மாதேஸ்வரன், எம்.பி., தனிஷ்க் ஜூவல்லரி பிரிவு துணைத்தலைவர் ஷரத் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்

நாமக்கல் நகரில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் நகரில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் நகரில், சேலம் மெயின் ரோட்டில் 5 ஆயிரம் ச.அடி பரப்பில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன், தனிஷ்க் ஜூவல்லரி பிரிவு துணைத்தலைவர் ஷரத் ஆகியோர் கலந்துகொண்டு புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தனிஷ்க் ஜூவல்லரி பிரிவு துணைத்தலைவர் ஷரத் கூறியதாவது:

இந்தியாவில் முதன்மையான தங்கம், வைர நகை விற்பனை நிறுவனமாக தனிஷ்க் நிறுவனம் விளங்கி வருகிறது. தமிழக அரசின் டிட்கோ மற்றும் டாடா நிறுவனம் இணைந்து தனிஷ்க் ஜூவல்லரி கம்பெனியை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மொத்த தங்க நகை விற்பனையில் சுமார் 8 சதவீதம் தனிஷ்க் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தனிஷ்க், தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை நடைபெற்றுள்ளது. முதன்முறையாக கேரட் மீட்டர் மூலம் வாடிக்கையாளர்களின் பழைய தங்க நகையை மதிப்பீடு செய்து, அவர்கள் முன்னிலையில் நகையை உருக்கி சுத்த தங்கத்திற்கு, புதிய தங்கத்திற்கான விலையை வழங்கி வருகிறோம்.

வாடிக்கையாளர்களுக்கு தூய தங்க நகைகள், வைர நகைகள், கலர் ஸ்டோன் நகைகள் மற்றும் தங்க காசுகள் விற்பனை செய்கிறோம். சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசைன்களில் தங்கம் வைர நகைகளை தயாரித்து, நம்பகமான முறையில் விற்பனை செய்து வருகிறோம். இந்தியாவில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட தனிஷ்க் ஷோரூம்கள் உள்ளன. தமிழகத்தில் 61வது ஷோரூம் தற்போது நாமக்கல்லில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் பட இடங்களில் புதிய ஷோரூம் திறக்க உள்ளோம்.

இந்தியாவில் புதிய தனிஷ்க் டிசைன் நகைகள் அறிமுகம் செய்யும்போது, அந்த கலெக்சன் நகைகள் நாமக்கல் ஷோரூமிலும் கிடைக்கும். தனிஷ்க்கின் பிரத்யேக திருமண நகை துணை பிராண்டான ரிவாவின் பிரமிக்க வைக்கும் நகைகள் இந்த ஷோரூமில் கிடைக்கும். திறப்பு விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு தங்க நகை வாங்குவோருக்கு தங்க காசு பரிசாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றிவிகாஸ் நிறுவனங்களின் இயக்குனர்கள் குணசேகரன், வெற்றி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story