மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் ஸ்காலர்ஷிப்..!

மத்திய அரசு  கல்வி நிறுவனங்களில்  படிக்கும்  மாணவர்களுக்கு தமிழக அரசின் ஸ்காலர்ஷிப்..!
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுளளது.

நாமக்கல் :

மத்திய அரசின் ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும், தமிழக மாணவர்கள், தமிழக அரசின் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் 2023 -2024 ம் ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Fresh and Renewal applications) பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புபயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கல்வி உதவித் தொகைக்கு 2023-24ம் கல்வி ஆண்டில் புதியது மற்றும் புதுப்பித்தலுக்காக மாணவ மணவியர் விண்ணப்பிக்கலாம். தகுதியான மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship¬¬¬¬schemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் 2023-2024-ம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து, வருகிற டிச. 15ம் தேதிக்குள் சென்னை சேப்பாக்கம், எழிலகம் இணைப்பு கட்டிடத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்க ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!