தமிழகம் தமிழ்நாடா, திராவிட நாடா ? நேரடி விவாதத்திற்கு சீமான் சவால்
செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தமிழகம் தமிழ்நாடா, திராவிடா நாடா என நேரடி விவாதத்திற்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தயாரா என நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக, நா த க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு, திராவிட நாடா, தமிழ்நாடா என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நேரில் விவாதம் செய்ய தயாரா. இடத்தை அவர் தேர்வு செய்ய தயாரா. யார் திராவிடர்? நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து தூக்கி எறியப்பட்டு, புதிய தமிழ் தாய் வாழ்த்து உருவாக்கப்படும். மேலும், தமிழக அமைச்சரவையில் யார் தமிழர்கள் உள்ளனர். விரல் விட்டு எண்ண முடியுமா. உள் இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்குப் போட்ட திருமாவளவன் முதல்வர் ஆகும் கனவு பலிக்காது என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் தமிழக முதல்வராக வருவதை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். அவருக்கு தகுதியிருக்கிறது, ஒரு தமிழராக, தம்பியாக அவர் முதல்வர் ஆவதை நான் பெருமைப் படுகிறேன். முதல்வராக திருமாவளவன் வரக்கூடாது என கூறுவதற்கு முருகன் யார். தமிழ் மண்ணில் தமிழர் திருமாவளவன் முதல்வர் ஆக கூடாதா. உள் இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு போட்டால் முதல்வராக்க விடமாட்டீங்களா. உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றோம். இட ஒதுக்கீட்டை வரவேற்கின்றோம்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு திமுக பயப்படும். நேர்மையாளனாக, நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் எதைக்கண்டும் பயப்பட தேவையில்லை. யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து ஈஷா யோகா மையம் கட்டப்பட்டுள்ளது என சொன்ன போது, அரசே இல்லை என்கிறது இது எதற்காக என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu