தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
X

தமிழக அரசு சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில், நாமக்கல் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழக வேளாண் பட்ஜெட்டில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் விபரம்:

தமிழ்நாட்டில், கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம், பனி வரகு, தினை, குதிரைவாலி, சாமை ஆகிய சிறு, குறு தானியங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. சிறு தானியங்கள் வறட்சியிலும் வளர்பவை. வளமற்ற மண்ணிலும் நலம்பெற்று துளிர்ப்பவை. ஊட்டச்சத்து நிறைந்தவை. தமிழ்நாட்டில் அவற்றை மீண்டும் செழிக்கச் செய்யும் வகையில், சிறுதானிய பரப்பு, உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில், கடந்த வேளாண்மை பட்ஜெட்டில், 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட இரண்டு சிறு தானிய மண்டலங்களுடன், உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று, நாமக்கல், திருப்பூர். கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இயற்கை உரம் தயாரித்தல்

தமிழ்நாட்டு விவசாயிகளின் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவற்றில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில், ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும். கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கரும்புக்கு டன் ஒன்றுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.195 கூடுதலாக வழங்கப்படும். குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தக்காளி, வெங்காயம் சீராகக் கிடைக்கச் செய்தல்

தக்காளி, வெங்காயம் தமிழ்நாட்டு சமையலில் இன்றியமையாத அம்சங்களாகிவிட்டன. எல்லா நாட்களிலும் தேவைப்படும் இவை, பருவத்தில் மட்டும் அதிகமாக உற்பத்தியாகி, உழவர்கள் பறிக்காமலேயே விட்டுவிடுகிற நிலை ஏற்படுகிறது. மற்ற காலங்களில், சாமானியர்களால் வங்கமுடியாத விலைக்கு விற்கப்படுகிறது. இதனைச் சரிசெய்து, ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தக்காளி, வெங்காயம் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெரம்பலூர், நாமக்கல், சேலம், தூத்துக்குடி, திருச்சி. திண்டுக்கல், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் விதைப்பு இயந்திரங்கள். சேமிப்புக் கட்டமைப்புகள், அறுவடை இயந்திரங்கள். வெங்காயத்தாள் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகிய உதவிகள் வழங்க ரூ. 29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெங்காய வரத்து நிலைப்படுத்தப்படும்.

வெங்காயம் சீராக கிடைக்க நடவடிக்கை

வெங்காய வரத்தை ஆண்டு முழுவதும் உறுதி செய்யும் வகையில், பெரம்பலூர், நாமக்கல், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் விதைப்பு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், சொட்டு நீர் பாசனம், சேமிப்பு கட்டமைப்புகள் போன்ற வசதிகளை செய்து தருவதற்காக ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

எண்ணெய் வித்து சிறப்பு மண்டலம்

நிலக்கடலை, எள் போன்ற முக்கிய எண்ணெய் வித்துக்கள் அதிகம் விளையும் மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, தருமபுரி, நாமக்கல், சேலம். திருச்சிராப்பள்ளி. கிருஷ்ணகிரி. கடலூர், திருப்பத்தூர், அரியலூர், வேலூர், புதுக்கோட்டை ஆகியவற்றை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலமாக உருவாக்கி, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, மதிப்புக்கூட்டுதல், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

உழவர் சந்தைகளை புதுப்பித்தல்

திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளை செய்து தருவதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்ப்படுகிறது.

ஒழுங்குமுறைக்கூடங்களுக்கு கூடுதல் கட்டமைப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி, காடையாம்பட்டி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமக்கல் ஆகிய இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு புதிய கட்டமைப்பு வசதிகள், ஈரோடு மாவட்டம், சிவகிரி, புஞ்சை காளமங்கலம், எழுமாத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம் மலையடிபாளையம், நெகமம், காரமடை, ஆனைமலை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கூடுதல் சேமிப்புக் கிடங்குகளுக்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் பட்ஜெட்டில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் மா வட்ட விவசாயிகள் பட்ஜெட் அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Updated On: 21 March 2023 10:52 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அனைவருக்கும் நிலம் வழங்க பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி மாநில செயலாளர்...
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில...
 4. லைஃப்ஸ்டைல்
  Variation Of Washing Soap And Powder கடின நீரில் சோப்புகள் கரையாது......
 5. அரசியல்
  மத்திய மந்திரி எல். முருகன் ராஜ்ய சபா எம்.பி. ஆக போட்டியின்றி தேர்வு
 6. அரசியல்
  தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
 7. தமிழ்நாடு
  நடிகர் இளவரசு மீதான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் முடித்து வைப்பு
 8. இந்தியா
  Corruption Free India In Tamil ஊழற்ற இந்தியாவை உருவாகக் நாம் என்ன...
 9. இந்தியா
  இந்திய தேர்தல் ஆணையத்தின் முதல் தலைமை தேர்தல் கமிஷனர் யார் தெரியுமா?
 10. இந்தியா
  TCAS இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்? விமான விபத்து...