தமிழக முதலமைச்சர் நாளை நாமக்கல் வருகை; இன்று முதல் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை!
Namakkal news- இன்று முதல் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை ( மாதிரி படம்)
Namakkal news, Namakkal news today- தமிழக முதலமைச்சர் நாளை நாமக்கல் வருகையை முன்னிட்டு, இன்று முதல் 2 நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறப்பதற்கு கலெக்டர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் நகரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு, புதிய பஸ் நிலையம் திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நாளை 22ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். நாளை 22ம் தேதி சேலம் விமான நிலையத்திலிருந்து, கார் மூலம் அவர் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால், பாதுகாப்பு கருதி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, இன்று காலை முதல், நாளை இரவு வரை, நாமக்கல் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu