/* */

உயர்த்தப்பட்ட தராசுகளுக்கான முத்திரை கட்டணம்: திரும்பப் பெற வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

உயர்த்தப்பட்ட தராசுகளுக்கான முத்திரை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அரசுக்குவேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

உயர்த்தப்பட்ட தராசுகளுக்கான முத்திரை கட்டணம்: திரும்பப் பெற வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை
X

நாமக்கல் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஜெயகுமார் வெள்ளையன்.

இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தல் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு, கடைகள் மற்றம் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும், அனைத்து வகையான தராசுகளுக்கும் முத்திரை கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. கொரோனா காலங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி, வணிகர்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலைக்கு சென்று, தற்போது படிப்படியாக மீண்டுவருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை, சிறு வணிகர்கள் பயன்படுத்தும் எடை போடும் தராசுகளின் ஆண்டு முத்திரைக் கட்டணத்தை, 50 சதவீதம் உயர்த்தி உள்ளது. மேலும், முறையான பயன்பாட்டிற்கான அபராத கட்டணத்தையும் உயர்த்தி அறிவித்துள்ளது. அதில், குறிப்பாக, 30 கிலோ வரை எடை போடும் தராசுகளின் முத்திரை கட்டணத்தை, ரூ. 400ல் இருந்து, 600 ஆக உயர்த்தியுள்ளது. அதேபோல், ஒவ்வொரு எடை போடும் தராசுகளின் அளவுகளுக்கு ஏற்ப, அதன் மறு முத்திரைக் கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள நெருக்கடியான பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட முத்திரை கட்டணம் மற்றும் அபராத கட்டண அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்று, சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 26 May 2023 9:45 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 2. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 3. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி
 4. தொழில்நுட்பம்
  கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'ருத்ரம்-II: இந்தியா வெற்றிகரமாக சோதித்த...
 5. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 6. ஈரோடு
  பெருந்துறை அருகே பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவில் இருந்து மீண்டது
 8. ஈரோடு
  ஈரோட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் கைதான ஆட்டோ
 9. ஈரோடு
  ரூ.35 ஆயிரம் லஞ்சம்: சத்தியமங்கலம் நகர சார்பமைப்பு ஆய்வாளர் உள்பட...
 10. தமிழ்நாடு
  தென்னகத்தை ஆளப்போகும் ராமேஸ்வரம் கஃபே..