ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர், ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண விழா கோலாகலம்

ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர், ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன்  திருக்கல்யாண விழா கோலாகலம்
X

Namakkal news- கொண்டமநாய்க்கன்பட்டி ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர், ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Namakkal news- ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர், ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்றது.

Namakkal news, Namakkal news today- நாமக்கல், சேந்தமங்கலம் அருகே ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகில் உள்ள கொண்டம நாயக்கன்பட்டி கிராமத்தில், பிரசித்திபெற்ற ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் முதன் முறையாக ஸ்ரீ ராமலிங்கேஸ்வரருக்கும், ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடை பெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. காலை 8 மணி அளவில் விநாயகர் கோயில் அருகில் இருந்து மேள தாளத்துடன் சீர்வரிசைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு திருக்கல்யாண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பகல் 12 மணி அளவில் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர், ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது. தெடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், மாலையில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி திருமணக் கோலத்தில் திருவீதி உலா நடைபெற்றது. சவுடாம்பிகா கோலாட்ட குழு சார்பாக கோலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை வீரக்குமாரர்கள், தேவாங்க குல அனைத்து மகளிர்கள் மற்றும் தேவாங்க குல மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
ai products for business