நாமக்கல் மாநகராட்சி பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்: கமிஷனர் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்: கமிஷனர் ஆய்வு

Namakkal News- நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் நடைபெறும், தீவிர கொசுப்புழு ஒழிப்பு பணிகளை, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Namakkal News-நாமக்கல் மாநகராட்சி பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாம்களை கமிஷனர் ஆய்வு செய்தார்.

Namakkal News, Namakkal News Today- நாமக்கல் மாநகராட்சி பகுதியில், சிறப்பு காய்ச்சல் முகாம்கள் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி மேயர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்படி கொண்டிசெட்டிபட்டி அருந்ததியர் தெரு, கணேசபுரம் பிள்ளையார் கோவில் தெரு, அண்ணா நகர் காலனி, எம்ஜிஆர் நகர் மற்றும் உத்தமபாளையம் ஆகிய 5 பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. உத்தமபாளையம் மற்றும் கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை மாநகராட்சி கமிஷனர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, காய்ச்சல் கண்ட நபர்களுக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கவேண்டும் என அலுவலர்களுக்கு தெரிவித்தார்.மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள், பணிகள் மேற்கொள்வதையும் திடீர் ஆய்வு செய்தார்.

கொசு புழு ஒழிப்பு பணியாளர்களிடம் வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு பணி செய்த நாட்களை சுவற்றில் நன்கு தெரியும்படி எழுதி பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார், அப்பகுதி பொதுமக்களிடம் தண்ணீர் தொட்டி மற்றும் வெளியே கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை நன்கு மூடி சுத்தமாக வைக்கும்படியும், வீட்டை சுற்றி கொசு புழுக்கள் உருவாகாத வகையில், தண்ணீர் சேமித்து வைக்கவும் வலியுறுத்தினார். சிறப்பு மருத்துவ முகாமில் 158 நபர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்கை அளிக்கப்பட்டது. ஒருவருக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது. 213 நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் தினசரி 5 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என கமிஷனர் மகேஸ்வரி தெரிவித்தார்.

மருத்துவ முகாம் மற்றும் ஆய்வு பணிகளில் மாநகர் நல அலுவலர் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story