6 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை; 50 வயது காமக்கொடூரனுக்கு 20 ஆண்டு சிறை

6 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை;  50 வயது காமக்கொடூரனுக்கு 20 ஆண்டு சிறை
X

Namakkal news-பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை செய்த 50 வயது காமக்கொடூரனுக்கு 20 ஆண்டு சிறை ( கோப்பு படம்)

Namakkal news- 6 வயது பெண் குழந்தைக்கு, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 50 வயது காமக்கொடூரனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

Namakkal news, Namakkal news today- 6 வயது பெண் குழந்தைக்கு, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 50 வயது காமக்கொடூரனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி அடுத்த நடுப்பட்டி காலனியை சேர்ந்தவர் ரவி (50). கூலி தொழிலாளியான அவர், கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி மாலை 3 மணிக்கு, அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த, முதல் வகுப்பு படிக்கும், 6 வயது குழந்தைக்கு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி வீட்டுக்குள் தூக்கிச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து, சிறுமியை மீட்டனர். இது குறித்து, நல்லிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கூலி தொழிலாளி ரவியை கைது செய்தனர்.

இந்த வழக்கு, நாமக்கல் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று நீதிபதி முனுசாமி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கூலி தொழிலாளி ரவிக்கு, இரு வேறு பிரிவு வழக்குகளில், 25 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 1,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி, 20 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து, அவர் போலீஸ் பாதுகாப்புடன், சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Tags

Next Story