சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் புகார் செய்வதற்கான விதிமுறைகள் வெளியீடு..!

சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டால்  புகார் செய்வதற்கான விதிமுறைகள் வெளியீடு..!
X

கோப்பு படம் 

சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் புகார் செய்வதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ன.

நாமக்கல்:

சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்வதற்கான விதிமுறைகளை மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சைபர் கிரைம் குற்றங்களில் (இண்டர்நெட் மோசடிகள்) முக்கியமானது பண மோசடி (Financial Fraud) சம்மந்தப்பட்ட குற்றங்கள் ஆகும். இது போன்ற குற்றங்களில் பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து தங்களது ஸ்மார்ட் போனிற்கு வரும் ஏதேனும் போலியான Link, (Fake App) மூலம் பணத்தை இழக்கின்றனர். போலி முதலீடு மற்றும் பகுதி நேர வேலை மோசடி மூலமும் பணத்தை இழக்கின்றனர், மேலும் பல்வேறு விதிமான இண்டர்நெட் மோசடிகள் மூலமும் பணத்தை இழக்கின்றனர்.

அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களை கருத்தில் கொண்டும், சைபர் கிரைம் குற்றம் நடைபெற்ற உடன் பாதிக்கப்பட்ட நபர் அனுப்பிய பணத்தை குற்றவாளிகளின் வங்கி கணக்கில் உடனடியாக முடக்குவதற்காகவும், காலதாமதமாக புகார்கள் பதிவு செய்யப்படும் பட்சத்தில், குற்றவாளிகள் வங்கிக் கணக்கில் இருந்து எளிதில் பணத்தை எடுத்து விடுவதாலும், அரசு சார்பில் இண்டர்நெட் குற்றங்கள் குறித்த புகார்கள் அளிப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து பண இழப்பு ஏற்பட்டால் 72 மணி நேரத்திற்குள், ஹெல்ப்லைன் நெ. 1930க்கு உடனடியாக பகார் செய்ய வேண்டும். 72 மணி நேரத்திற்கு மேல் கால தாமதமானால் www.cybercrime.gov.in என்ற இ-மெயில் மூலம் புகார் அளிக்க வேண்டும். மற்ற இண்டர்நெட் குற்றங்கள் நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற இ-மெயில் மூலம் புகார் அளிக்க வேண்டும்.

தொலைந்துபோன செல்போன் மூலம் சம்மந்தப்பட்டவரின் வங்கி கணக்கில் இருந்து பண இழப்பு ஏற்பட்டால் மட்டும் ஹெல்ப்லைன் நெ. 1930க்கு, 72 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும். அதற்கு மேல் தாமதம் ஏற்பட்டால் www.cybercrime.gov.in என்ற இ-மெயில் மூலம் புகார் அளிக்க வேண்டும்.

செல்போன் தொலைந்து போனால் உள்ளூரில் உள்ள சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம் அல்லது Police Citizen portal Website வெப்சைட்டில் புகார் செய்து, அதற்கான ரசீது பெற்று www.ceir.gov.in என்ற வெப்சைட்டில் புகாரை பதிவு செய்ய வேண்டும். சைபர் கிரைம் சம்மந்தமான குற்றங்களுக்கு, மேற்கண்ட தகவல்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் புகார் செய்து பயன்பெறலாம் என எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Tags

Next Story