நாமக்கல்லில் ரூ.2.53 கோடியில் சாலைப்பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

நாமக்கல்லில் ரூ.2.53 கோடியில் சாலைப்பணிகள்:  எம்எல்ஏ துவக்கி வைத்தார்
X

நாமக்கல் முல்லை நகரில் சாலை மேம்பாட்டுப்பணியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார். அருகில் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம்.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில், ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப்பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

நாமக்கல் நகராட்சியில் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், சேலம் ரோடு எம்எம்ஆர் தியேட்டர் முதல் ராமாபுரம்புதூர் வரை ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மேம்படுத்துதல், முதலைப்பட்டி பைபாஸ் ரோட்டில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் சர்வீஸ் ரோட்டை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்துதல், ரோஜா நகரில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதியுடன் தார் சாலை அமைத்து, கொண்டிசெட்டிப்பட்டி மெயின் ரோடு முதல் வேட்டையகவுண்டர்புதூர் வரை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மேம்படுத்துதல், முல்லைநகர் மெயின் ரோடு மற்றும் குறுக்கு ரோடுகளை ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்துதல் உள்ளிட்ட மொத்தம் 10 சாலைப்பணிகள் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டன.

இதையொட்டி நடைபெற்ற பூமி பூஜை விழாவில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், இன்ஜினியர் ராஜேந்திரன், முன்னாள் நகராட்சித் தலைவர் கரிகாலன் உள்ளிட்ட பலர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு