/* */

தாட்கோ மூலம் வேலை வாய்ப்பு பெறும் பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டுகோள்

தாட்கோ மூலம் வேலை வாய்ப்பு பெறும் பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

தாட்கோ மூலம் வேலை வாய்ப்பு பெறும் பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டுகோள்
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.

தாட்கோ மூலம் வேலை வாய்ப்பிற்கான பட்டப்படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பில் (பிஎஸ்சி கம்ப்யூட்டர் டிசைனிங், பி.காம், பிசிஏ, பிபிஏ) இலவசமாக சேர்ந்து படித்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூலம், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் பிஎஸ்சி கப்யூட்டிங் டிசைனிங் பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில் பிசிஏ, பிபிஏ, பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் இண்டகரேட்டட் மேனேஜ்மெண்ட் பட்டபடிப்பில் சேர்ந்து படித்திடவும் வாய்ப்பு பெற்று தரப்படும்.

இதற்கான தகுதிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். பிளஸ் 2-ல், 2022 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்படிப்பிற்கான செலவு தாட்கோ மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்று, வேலை வாய்ப்பு பெற்றால், ஆண்டு சம்பளமாக ரூ. 1,70,000 முதல் ரூ.2,20,000 வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் சம்பள உயர்வும் பெறலாம். இப்பயிற்சியில் சேர தாட்கோ வெப்சைட்டான தாட்கோ.காம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 May 2023 3:56 PM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  விண்வெளிக்கு ஒரு குறுகிய பயணம் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது?
 2. தொழில்நுட்பம்
  செவ்வாய் கிரகத்தில் இரண்டு புதிய பள்ளங்களுக்கு பீகாரில் உள்ள...
 3. திருவள்ளூர்
  பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பாலாலயம்..!
 4. கோவை மாநகர்
  தனியார் மருத்துவமனை கொலை விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா..!
 5. வீடியோ
  உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? Selvaperunthagai-யை பந்தாடிய...
 6. லைஃப்ஸ்டைல்
  'பூவரசு' மரமல்ல அது மருந்தகம்..! இயற்கை தந்த வரம்..!
 7. வீடியோ
  தயாராகிறது Annamalai 2.0 மெகா நடைபயணம் | Delhi தலைமை Green சிக்னல்...
 8. லைஃப்ஸ்டைல்
  மாம்பழத்தில் செய்யப்படும் 7 வகையான ருசியான உணவு ரகங்கள் பற்றி...
 9. உலகம்
  குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழப்பு
 10. ஈரோடு
  ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு