நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது..!

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி   கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது..!
X

கோப்பு படம் 

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 2 பேர் குண்டர் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் டிஜிபி சீமா அகர்வால், ஐஜி ஜோசி நிர்மல்குமார், ஆகியோர் உத்தரப்வுபடி, கோவை மண்டல எஸ்.பி. பாலாஜி சரவணன், ஈரோடு டி.எஸ்.பி., ராஜபாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், 4,100 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட கீழபாலபட்டியை சேர்ந்த வேலுசாமி மகன் ராகுல் (24), ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார் (24) ஆகிய இருவரையும், கோவை மண்டல எஸ்.பி. பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், நாமக்கல் கலெக்டர் உமா, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதையடுத்து, நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் (பொ) உமா, ரேஷன் அரிசி கடத்திய வாலிபர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.

Tags

Next Story