கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் மக்கள் தொடர்பு முகாம்: கலெக்டர் பங்கேற்பு

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் மக்கள்  தொடர்பு முகாம்: கலெக்டர் பங்கேற்பு
X

Namakkal news-கபிலர்மலையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் உமா கலந்துகொண்டு, பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Namakkal news- பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 282 பயனாளிகளுக்கு ரூ.3.31 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், மக்களை தேடி அரசு அலுவலர்கள் சென்று, கோரிக்கை மனுக்களை பெற்று உரிய தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் அப்பகுதி மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கவும், அரசின் அனைத்து திட்டங்கள் குறித்து கண்காட்சி அமைத்து பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து விளக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கொத்தமங்கலம் கிராமத்தில் இன்றைய மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறுகிறது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட, 322 ஊராட்சிகளில் 69 இடங்களில், ‘மக்களுடன் முதல்வர்‘ திட்ட சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 18 டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர் திட்டம்” மூலம் மொத்தம் 39 முகாம்கள் நடத்தப்பட்டு, முகாம்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் அரசுத்துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு மின் இணைப்பு மாறுதல், பட்டா மாறுதல், கல்வி கடனுதவி, தொழில் கடன், வங்கி கடனுதவி, மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளது. இம்முகாம் நடைபெறும் இடங்களிலேயே கம்ப்யூட்டர் மூலம் தங்களின் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் முகாமில் தவறாமல் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற்று பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

Tags

Next Story
ஓட்டு அரசியலுக்கு இலவசங்கள் எனில் கடும் எதிர்ப்பு - பா.ஜ. அண்ணாமலை வெளியிட்ட பளிச் எச்சரிக்கை..!