நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம்கள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரிய  நுகர்வோர் குறைதீர் முகாம்கள் அறிவிப்பு
X
நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான மின்சார வாரிய, நுகர்வோர் குறைதீர் முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான மின்சார வாரிய, நுகர்வோர் குறைதீர் முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் வட்ட மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில், மாதந்தோறும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், கோட்ட அலுவலகங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு, மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவர்களின் குறைகள் நேரடியாக கேட்டு, தீர்வு காணப்படுகிறது. இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான மின் நுகர்வோர் கூட்டம் வருகிற 7ம் தேதி, முதல் புதன்கிழமை காலை 11 மணிக்கு நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. வருகிற 14ம் தேதி, 2வது புதன்கிழமை காலை 11 மணிக்கு பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 17ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு பள்ளிபாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும். வரும் 21ம் தேதி 3வது புதன்கிழமை காலை 11 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. 28ம் தேதி 4வது புதன்கிழமை காலை 11 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தின் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள், சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் நடைபெறும், குறைதீர் கூட்டங்களில் கலந்துகொண்டு, மின்சார வாரியம் சம்மந்தமான தங்களின் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions in healthcare