கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை துவக்கி வைத்த பொன்னுசாமி எம்எல்ஏ

கொல்லிமலையில் ஓரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவில் மலர் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். அருவிகளில் குளிக்க தடை விதிப்பால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பல்வேறு சிறப்புகளை கொண்டது. அதில் முக்கியமானது கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார் என்பதாகும். அவரது கொடைத்தன்மையையும், வீரத்தையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆடி. 17, 18 தேதிகளில் தமிழக அசின் சார்பில் ஓரிவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொல்லிமலை செம்மேட்டில் நடைபெற்ற ஓரி விழா, நாமக்கல் கிளாரினெட் வித்வான் பிரபு வேனுகோபாலின் மங்கள இசையுடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி துவக்கி வைத்துப் பார்வையிட்டார். இக்கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் வண்ண ரோஜா மலர்களால் ஆன மலர் படுக்கை மற்றும் மலர் அலங்காரம் ஆகியவை கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யானை வடிவம், பலவண்ண மலர்கலால் ஆன ஆக்டோபஸ், நண்டு, மீன், சிப்பி மற்றும் காதல் சின்னம், காய்கறிகளை கொண்டு பட்டாம் பூச்சி, தானியங்களை கொண்டு செய்யப்பட மக்களுடன் முதல்வர் சின்னம் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மூலிகைகள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மருத்துவ பெயரின் தாவரவியல் பெயர் பயன்படும் பகுதி மருத்துவப் பயன்கள் குறித்து விளக்க குறிப்பு வைத்து மருத்துவப்பயிர்கள் கண்காட்சி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாளை 3ம் தேதி நடைபெறும் 2ம் நாள் ஓரி விழா நிகழ்ச்சியில் வில்வித்தைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் நம் அருவி ஆகிய அருவிகள் அமைந்துள்ளன. வாழ்வில் ஓரி விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த அருவிகளில் குளித்து மகிழ்வர். இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக மேற்குறிப்பிட்ட அருவிகளில் குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் கொல்லிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu