நாமக்கல் அருகே பெயிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது

நாமக்கல் அருகே பெயிண்டிங் தொழிலாளி கொலை  வழக்கில் 2 வாலிபர்கள் கைது
X
நாமக்கல் அருகே பெயிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் அருகே பெயிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் அருகே சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(44), பெயிண்டிங் தொழிலாளி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மரூர்ப்பட்டி ஏரிக்கரையில் உள்ள விவசாய தோட்டத்தில் தலையில் காயங்களுடன் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து மரூர்ப்பட்டி விஏஓ முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பிரேத பரிசோதனையில், செந்தில்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நாமக்கல் நல்லிபாளையத்தை சேர்ந்த சதீஷ்(27), சேலம் ரோடு முருகன் கோயில் பகுதியை சேர்ந்த ரித்திஷ் (19) ஆகிய இருவருக்கும் செந்தில்குமார் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

சதீஷ் ஸ்டிக்கர் கடை வைத்துள்ளார். கொலை செய்யப்பட்ட செந்தில்குமார், பெயிண்டிங் வேலை செய்து வருவதால், கட்டிங் மெசின் வாங்க உறவினரிடம் ரூ. 1.50 லட்சம் கடன் வாங்கினார். அதில் ரூ. 1 லட்சத்தை பேங்கில் போட்டுவிட்டு, ரூ. 40 ஆயிரம் கையில் வைத்திருந்தார். கட்டிங் மெசின் வாங்க செந்தில்குமார், சதீஷை அணுகியுள்ளார். அப்போது, கட்டிங் மெசின் காட்டுவதாக கூறி, செந்தில்குமாரை, சதீஸ், ரித்திஸ் இருவரும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அவரிடம் இருக்கும் ரூ. 40 ஆயிரத்தை பறிக்க இருவரும் திட்டமிட் டனர். இதையடுத்து செந்தில்குமாரை மரூர்ப்பட்டி ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று, தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டு ரூ. 40 ஆயிரத்தை பறித்து கொண்டு இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து நாமக்கல் போலீசார் சத்தீஸ், ரித்திஸ் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். கோர்ட் உத்தரவின் பேரில் இருவரும் ரிமாண்ட் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story