வெளிமாநில தொழிலாளர்கள் ரேசன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
Namakkal News- வெளிமாநில தொழிலாளர்கள் ரேசன் கார்டுபெற விண்ணப்பிக்கலாம் ( மாதிரி படம்)
Namakkal News, Namakkal News Today- நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும், வெளிமாநில தொழிலாளர்கள், ரேசன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, ரேசன் கார்டு அட்டை இல்லாத, பதிவு செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேசன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும், பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ள, புலம் பெயர்ந்த தொழிலாளர்களில், இ-ஷ்ரம் (e-Shram Portal) வெப்சைட்டில் பதிவு செய்துள்ள நபர்களில் சிலர், நீண்ட காலமாக குடும்பத்துடன் நிரந்தரமாக நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தில் உள்ள ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் இங்கேயும், ஒரு சிலர் தான் சார்ந்த மாநிலத்திலும் வசித்து வருகிறார்கள். இதில் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் குடும்பத்துடன் வசித்து, ஏற்கனவே, இ-ஷ்ரம் (e-Shram Portal) வெப்சைட்டில் பதிவு செய்துள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில், எந்த மாநிலத்திலும் ரேசன் கார்டுஇல்லாதவர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் ரேசன் கார்டு வழங்கிடவும், தற்காலிகமாக பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு, அவர்களது விவரங்களை முழுமையாக பெற்று அவர்களுக்கும் ரேசன் கார்டு வழங்கிட அவர் சார்ந்த மாநிலத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்படும்.
எனவே, இ-ஷ்ரம் வெப்சைட்டில் பதிவு செய்துள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில், நீண்ட காலமாக தமிழ்நாட்டில் வசித்து வருபவர்களும், தற்காலிகமாக தமிழ்நாட்டில் வசித்து வருபவர்களும் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய தாலுகா அலுவலகங்களில் இயங்கி வரும், வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பத்தினை சம்ர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu