அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்க கலெக்டர் உத்தரவு

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே  விநாயகர் சிலைகள் கரைக்க கலெக்டர் உத்தரவு
X

மோகனூர் காவிரி ஆற்றின் படித்துறையில், விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவிட்டு உள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்திக்காக, நாமக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் கோயில்களிலும், பொது இடங்களிலும், பொதுமக்களின் வீடுகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிலைகள் பக்தர்கள் மூலம் மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் நீர் நிலைகளில் கரைத்து விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, மோகனூர் மற்றும் ப.வேலூர் காவிரி ஆற்றின் படித்துறைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இது தொடர்பான ஆய்வுக்கூட்டம், மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் உமா கூறியதாவது:-

விநாயகர் சிலைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அடையாளமிடப்பட்டு, குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய 4 இடங்களில் உள்ள ஆற்றுப்பகுதி படித்துறைகளில் போதுமான அளவு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உமா விநாயகர் சிலைகளை கரைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள மோகனூர் மற்றும் பரமத்தி வேலூர் காவிரி கரையோர படித்துறைகளில் வாகன நிறுத்தமிடம், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள், சிலை கரைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், அறிவிப்புகளை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கி, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், கூடுதல் வெளிச்சத்திற்காக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, தாசில்தார்கள் மணிகண்டன், முத்துக்குமார், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் கலைராணி, சோமசுந்தரம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story