நாமக்கல்லில் ரோட்டரி சங்கம் சார்பில் நாளை உலக சாதனை சிலம்பம் போட்டி

நாமக்கல்லில் ரோட்டரி சங்கம் சார்பில்  நாளை உலக சாதனை சிலம்பம் போட்டி
X

சிலம்பம் போட்டி (கோப்பு படம்).

நாமக்கல்லில் ரோட்டரி சங்கம் சார்பில் உலக சாதனை சிலம்பம் போட்டி நாளை நடைபெற உள்ளது.

ரோட்டரி சங்கம் சார்பில், போலியோ விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 3 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்கும், உலக சாதனை சிலம்பம் போட்டி நாளை நாமக்கல்லில் நடைபெறுகிறது.

சர்வதேச அளவில் போலியோ இல்லாத உலகை உருவாக்கும் நோக்கத்தில் ரோட்டரி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் போலியோ நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மிகச்சில இடங்களில் போலியோ நோய் மீண்டும் தாக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்ற இயக்கத்தை ரோட்டரி சங்கம் முன்னெடுத்து வருகிறது. இதையொட்டி பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் மாவட்ட ரோட்டரி சங்கங்களின் சார்பில், போலியோ விழிப்புணர்வ ஏற்படுத்தும் வகையில், 3 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொள்ளும், சிலம்பம் பயிற்சி நாமக்கல் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமி திருமண மண்டபம் அருகில் நாளை 26ம் தேதி, திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் இடைவிடாது நடைபெற உள்ளது. இதையொட்டி நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சிலம்பம் பயிற்சி திட்ட தலைவர் பொன்மணி சுரேஷ் கூறியதாவது:-

நாமக்கல் 2982 மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் வல்வில் ஓரி சிலம்பாட்டம் சங்கம் இணைந்து, போலியோ விழிப்புணர்வுக்காக 3,000 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் மாபெரும் சிலம்பம் பயிற்சி நாளை 26ம் தேதி காலை 8 மணி முதல் 9 மணிவரை, நாமக்கல் - சேலம் ரோட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபம் அருகில் நடைபெற உள்ளது.

உலக சாதனை நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த போட்டியை ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. காலை 8 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவிற்கு, ரோட்டரி மாவட்ட கவர்னர் சிவகுமார் தலைமை வகிக்கிறார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் உமா, எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், எம்.பிக்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். 3 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் இடைவிடாது ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றும் உலக சாதனை போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என கூறினார்.

Tags

Next Story