காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலையை தூய்மைப்படுத்திய என்சிசி மாணவர்கள்..!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலையை  தூய்மைப்படுத்திய என்சிசி மாணவர்கள்..!
X

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள காந்தி சிலையை, கந்தசாமி கண்டர் கல்லூரி என்சிசி மாணவர்கள் தூய்மைப்படுத்தினார்கள்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கலை அறிவியல் கல்லூரி என்சிசி மாணவர்கள் காந்தி சிலையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலையை தூய்மைப்படுத்திய என்இசிசி மாணவர்கள்

நாமக்கல், அக். 2-

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கலை அறிவியல் கல்லூரி என்சிசி மாணவர்கள் காந்தி சிலையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கலை அறிவியல் கல்லூரி, என்சிசி விமானப்படை பிரிவு சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்து அலுவல வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட என்சிசி மாணவ மாணவியர், டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் வளாகத்தில் உள்ள காந்தி சிலையை தூய்மைப்படுத்தினார்கள். ஆங்கிலத்துறை பேராசிரியர் கிருஷ்ணராஜ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்துப் பேசினார். கல்லூரி என்சிசி விமானப்படை ஃபிளையிங் ஆபீசர் சிவகுமார், பேராசிரியர்கள், தியாகி கணேசன் மற்றும் என்சிசி மாணவ மாணவியர், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story