நாமக்கல்லில் நவீன ஆவின் பால் பண்ணை: மத்திய அரசு ரூ.6.89 கோடி மானிய உதவி

நாமக்கல்லில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நவீன ஆவின் பால் பண்ணைக்காக, மத்திய அரசு ரூ. 6.89 கோடி மானிய உதவி வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் நவீன ஆவின் பால் பண்ணை: மத்திய அரசு ரூ.6.89 கோடி மானிய உதவி
X

ராஜேஷ்குமார்

நாமக்கல்லில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நவீன ஆவின் பால் பண்ணைக்காக, மத்திய அரசு ரூ. 6.89 கோடி மானிய உதவி வழங்கியுள்ளது.

இது குறித்து ராஜ்யசபா எம்.பியும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான, ராஜேஷ்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

சேலம் ஆவினில் இருந்து பிரிக்கப்பட்டு, நாமக்கல் ஆவின் தனியாக செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து தினசரி சுமார் 1 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது சேலம் ஆவினுக்கு பால் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நாமக்கல் ஆவின் லாபத்தில் செயல்பட்டு வருகிறது. நாமக்கல்லில் ஆவின் மூலம் தனியாக நவீன பால் பண்ணை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அதற்கான உத்தரவினை பிறப்பித்தார். இதையொட்டி, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் சுமார் 11 ஏக்கர் பரப்பில், ரூ.50 கோடி மதிப்பீட்டில் அதிநவீன ஆவின் பால் பண்ணை அமைகிறது. இந்த நவீன பால் பண்ணை மூலம், நாமக்கல் பகுதியில் கொள்முதல் செய்யப்படும் பாலை இங்கேயே பதப்படுத்தி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் பால் மூலம் வெண்ணெய், தயிர், சீஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களும் தயாரிக்கப்படும். நாமக்கல் நவீன ஆவின் பால் பண்ணைக்காக, மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் துறை மூலம் ரூ.6.89 கோடி முழு மானியமாக அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கான கடிதம் வரப்பெற்றுள்ளது. விரைவில் நவீன பால் பண்ணை கட்டுமானப்பணிக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணிகள் துவக்கப்படும்.

நாமக்கல் நகருக்கு புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி, முதலைப்பட்டி அருகே நடைபெற்று வருகிறது. இந்த பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக 1 கி.மீ தூரம் அனுசாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி முடிவுற்றுள்ளது. விரைவில் பணிகள் துவக்கப்படும். நாமக்கல் சேலம் ரோட்டில் முதலைப்பட்டி முதல், சேந்தமங்கலம் ரோடு, துறையூர் ரோடு, திருச்சி ரோடு, மோகனூர் ரோடு வழியாக வள்ளிபுரம் அருகே உள்ள தொட்டிப்பட்டி வரை ரிங் ரோடு அமைக்கும் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பணிகள் முடிவடைந்து, ரிங் ரோடு அமைக்கப்படும். அதன் பிறகு நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்.

மோகனூர் ஒன்றியத்தில் வளையப்பட்டி, அரூர் உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமான சுமார் 500 ஏக்கர் காலி நிலம் உள்ளது. இது தவிர மேலும் தேவைப்படும் நிலம் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் கையகப்படுத்தப்பட்டு, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இந்த தொழிற்பேட்டையின் மூலம் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

நாமக்கல் நகராட்சியுடன் 12 கிராம பஞ்சாயத்துக்களை இணைத்து மாநகராட்சியாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். இதை ஏற்று, சட்டசபை மானியக்கோரிக்கையின் போது நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு, நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் நேருவுக்கும், நாமக்கல் பகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என அவர் கூறினார்.

Updated On: 31 March 2023 8:00 AM GMT

Related News

Latest News

 1. ஈரோடு
  ஈரோட்டில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்
 2. ஈரோடு
  கூட்டுறவு நிறுவனங்களில் தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக...
 3. டாக்டர் சார்
  Stomach Cancer Symptoms In Tamil இரைப்பை புற்றுநோய் ஏற்பட காரணங்கள்...
 4. நாமக்கல்
  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஸ்டிரைக்: பொதுமக்கள்
 5. லைஃப்ஸ்டைல்
  Bestie quotes Tamil உயர்வென்ன தாழ்வுமென்ன உந்தன் அன்பின் முன்னாலே
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும்...
 7. லைஃப்ஸ்டைல்
  Life Abdul Kalam quotes in Tamil அப்துல் கலாம் மேற்கோள்கள்:...
 8. காஞ்சிபுரம்
  ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகள்
 9. காஞ்சிபுரம்
  பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப்படுத்தும் பணியை எதிர்த்து போராட்டம்
 10. வீடியோ
  இன்று பாஜக MLA-க்கள் அதிமுகவில் இணைகின்றனர் | | Amman Arjun...