சேந்தமங்கலத்தில் தேசிய ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

சேந்தமங்கலத்தில் தேசிய ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
X

Namakkal News- சேந்தமங்கலத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Namakkal News- நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், அப்துல் கலாம் நண்பர்கள் குழு சார்பில் தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

Namakkal News, Namakkal News Today- நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், அப்துல் கலாம் நண்பர்கள் குழு சார்பில் தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

ஆசிரியர் தினம் என்பது, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது பிறந்த நாளான செப். 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி தலைமை வகித்தார். ஆடிட்டர் சரவணன் முன்னிலை முன்னிலை வகித்தார். அப்துல் கலாம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் அப்துல் கலாம் நண்பர்கள் குழு சார்பில், பள்ளி லைப்ரரிக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. குழு நிர்வாகிகள் ராஜா, சுரேந்திரன், ஜெகன், ராகவன் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story