உதவி பேராசிரியர் பணி தேசிய தேர்வுக்கு நாமக்கல் அரசு கல்லூரியில் பயிற்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற, உதவிப்பேராசிரியர் பணி தேர்வுக்கான பயிற்சி முகாமில், தேசிய தகுதி தேர்வில் முதலிடம் பிடித்த, மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஞானப்பிரகாசம் பேசினார்.
நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான தகுதி தேர்விற்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், கணிதத் துறை சார்பாக உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான தகுதி தேர்விற்கான (NET, SLET) பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, வேலை வாய்ப்பு பெறுவதற்கு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். கணிதத் துறை தலைவர் கணேசன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய தகுதி தேர்வில் முதலிடம் பிடித்த மதுரை, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஞானப்பிரகாசம் கலந்துகொண்டு, தேசிய தகுதித் தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறுவது குறித்து சிறப்பு பயிற்சி அளித்தார்.
மேலும் கணிதவியல் துறையை சேர்ந்த சவுந்திரராஜன், கணிதப் பாடத்தில் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சதாசிவம் கணிதப் பாடத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். முகாமில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள், இளநிலை மற்றும் மற்றும் முதுகலை பட்டதாரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 185 பேர் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கையேடு வழங்கப்பட்டது.
முகாமில் கணிதத் துறை தலைவர் கணேசன், போராசிரியர்கள் விஜயலட்சுமி, சவுந்திரராஜன், உதவிப் பேராசிரியர்கள் ரகுபதி, சுந்தர்ராஜன், சிவகுமார், விஜயலட்சுமி, வடிவேல், சாந்தி, தமிழரசி, சித்ரா மற்றும் மலர்விழி ஆகியோர் பங்கேற்று பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu