நாமக்கல்லில் மாநில கூடைப்பந்து போட்டி துவக்கம்: சென்னை அணி வெற்றி
நாமக்கல்லில் இன்று மாலை துவங்கிய மாநில கூடைப்பந்து போட்டியில் சென்னை அரைஸ் அணியும், ஈரோடு எம்எம்ஆர் அணியும் மோதின.
நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் திருச்செங்கோடு, பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 23 ஆவது, மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இன்ரு துவங்கியது.
இந்தப் போட்டிகள், பகல் மற்றும் இரவு மின்னொளியில் நடக்கிறது. தமிழக கூடைப்பந்து கழக ஒப்புதலுடன் நடக்கும் இந்தப் போட்டிகள், முதல் சுற்றில் நாக் அவுட் முறையிலும், தொடர்ந்து, லீக் முறையிலும் நடைபெறுகிறது. தமிழகத்தின் பிரபல அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், ஆண்கள் கூடைப்பந்து பிரிவில் 24 அணிகள், பெண்கள் பிரிவில் 11 அணிகள் என மொத்தம் 35 அணிகள் கலந்துகொள்கின்றன. சுமார் 600-க்கும் மேற்பட்ட கூடைப்பந்து வீர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
அதன்படி, இன்று மாலை நடைபெற்ற போட்டி துவக்க விழாவுக்கு, திருச்செங்கோடு பி.ஆர்.டி. குரூப்ஸ் சேர்மன் பரந்தாமன், மாநில கூடைப்பந்து கழக துணைத் தலைவர் பாலா, இணை செயலாளர் அருள் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், கே.கே.பி. குரூப் சேர்மன் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தார். நாமக்கல் நகராட்சி கமிஷனர் சுதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
ஆண்களுக்கான முதல் போட்டியில், சென்னை அரைஸ் அணியும், ஈரோடு எல்.எம்.ஆர்., அணியும் மோதின. அதில், சென்னை அரைஸ் அணி, 85:67 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து, நாமக்கல் பேஸ்கட்பால் கிளப் அணியும், சேலம் ஸ்பார்க் அணியும் விளையாடின. வரும் 5 ஆம் தேதி வரை, பகல் மற்றும் இரவு நேரங்களில், ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் கூடைப்பந்து கழக தலைவர் நடராஜன், திருச்செங்கோடு பி.ஆர்.டி., ஸ்போர்ட்ஸ் கிளப் சேர்மன் பரந்தாமன், நாமக்கல் கூடைப்பந்து கழக சேர்மன் பாண்டியராஜன், செயலாளர் முரளி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu