மாநகராட்சியானது நாமக்கல் நகராட்சி; பொதுமக்கள் மகிழ்ச்சி

Namakkal News-நாமக்கல் மாநகராட்சி மேயராக இன்று பொறுப்பேற்க உள்ள கலாநிதி, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமாரை எம்.பியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Namakkal News, Namakkal News Today- நாமக்கல் நகராட்சி இன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்துடன் இணைந்திருந்த நாமக்கல் பகுதி, கடந்த 1997ம் ஆண்டு, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியால் தனியாக பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது நாமக்கல் நகராட்சியில் 30 வார்டுகள் இருந்தன. அதன் பின்னர் நாமக்கல் நகராட்சியுடன் அருகில் இருந்த 9 கிராம பஞ்சாயத்துக்கள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு நகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு 39 வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன.
பின்னர் கடந்த 2021ம் ஆண்டு திமுக அரசு அமைத்தவுடன் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் திமுக கவுன்சிலர்கள் வெற்றிபெற்று, நகராட்சித் த
லைவராக கலாநிதி பதவியேற்றார். பின்னர், தேர்வு நிலை நகராட்சியாக இருந்த நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு சட்டசபையில் அறிவித்தார்.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து அதற்கான மேயர் மற்றும் துணை மேயரையும் அறிவித்துள்ளார். இøதையொட்டி இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி மேயராக தற்போதைய நகராட்சித் தலைவர் கலாநிதி, துணை மேயராக தற்போதைய நகராட்சித் துணைத்தலைவர் பூபதி ஆகியோருக்கு அதற்கான உத்தரவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.
இதையொட்டி இருவரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். பின்னர் 39 நகராட்சி கவுன்சிலர்களுடன் அவர்கள் சென்னை புறப்பட்டு சென்றனர். நகராட்சியாக இருந்த நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu