நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்
நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் வைகாசி தேர்த்திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தூக்குத்தேரில் வைத்து பக்தர்கள் வீதி வீதியாக தூக்கிச்சென்று பூஜை செய்தனர்.
நாமக்கல்லி அருள்மிகு பலபட்டறை பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
நாமக்கல் மெயின் ரோட்டில் பிரசித்திபெற்ற அருள்மிகு பலபட்டறை மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேர்த்திருவிழா சுமார் 3 மாத காலம் சிறப்பபாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊராடங்கால் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8ம் தேதி காலை திரளான பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். இரவு கோயில் வளாகத்தில் சக்தி அழைப்பு, கம்பம் நடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. 9 ஆம் தேதி காலை 6 மணிக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 15 ஆம் தேதி மறுகாப்பு பூஜைகள் நடைபெற்றது. கடந்த 22 ஆம் ஞாயிற்றுக்கிழமை வடிசோறு மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. இன்று 23ம் தேதி அதிகாலை அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், தேரோட்டம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், மாவிளக்கு ஊர்வலமும் நடைபெற்றது.
நாமக்கல் ச.பே.புதூர் மற்றும் ஆர்.பி. புதூர் பகுதி மக்கள் தூக்குத்தேரில் வைத்து மாரியம்மனை வீதி வீதியாக தூக்கிச்சென்றனர். பொதுமக்கள் ஆங்காங்கு கூடிநின்று மாரியம்மனை வழிபட்டனர். நகரம் முழுவதும் வாழை மரம், தோரனங்கள் கட்டப்பட்டு, வான வேடிக்கைகள், ஒலிபெருக்கிகள், மேள தாளங்கள் முழங்க விழாக்கோலம் பூண்டுள்ளது. நாளை 24 ஆம் தேதி மாவிளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், 25 ஆம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 26 ம் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து ஜூலை மாதம் முடிய தினசரி காலை, மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று நகரின் பல்வேறு பகுதிகளில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பழனிவேலு, உதவி கமிஷனர் ரமேஷ் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu