நாமக்கல் கம்பன் கழக மாநில பேச்சுப் போட்டி: மதுரை கல்லூரி மாணவி முதலிடம்
Namakkal News - நாமக்கல் கம்பன் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநில பேச்சுப்போட்டியை, அதன் தலைவர் சத்தியமூர்த்தி துவக்கி வைத்துப் பேசினார்.
Namakkal News, Namakkal News Today- நாமக்கல் கம்பன் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் மதுரை தியாகராஜா கல்லூரி மாணவி முதலிடம் பெற்றார்.
நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி, சனு இண்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்றது. கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் அரசு பரமேஸ்வரன், பொருளாளர் தில்லை சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து மருத்துவக்கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி, வேளாண் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பி.எட். கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டி துவங்குவதற்கு முன்பு, கம்பர் போற்றிய இயற்கை, கம்பர் காட்டும் இறைமை, கம்பர் நோக்கில் இறையாண்மை உள்ளிட்ட தலைப்புகளில், குலுக்கல் முறையில் வழங்கப்பட்ட தலைப்பின் கீழ் ஒவ்வொரு போட்டியாளரும் 4 நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டனர்.
கோபாலநாராயணமூர்த்தி, பாரதி, கலையரசி உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கினார். போட்டி முடிவில் மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி சுபநிதிசுப்பிரமணி முதல் பரிசு பெற்றார். பண்ணாரியம்மன் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் அஸ்வின் 2ம் பரிசும், கோவை பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவி ரேஷ்மா 3ம் பரிசும் பெற்றனர். மதுரை பாத்திமா கல்லூரி மாணவி சுரேகா, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி மாணவி காருண்யா ஆகியோர் சிறப்பு பரிசுகளை பெற்றனர். முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், 2ம் பரிசாக ரூ. 5 ஆயிரம், 3ம் பரிசாக ரூ. 3 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டன. பங்கேற்ற அவைருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu