நாமக்கல் காமராஜர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் தேர்வில், முதல் 3 இடங்களைப் பெற்ற, நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, பள்ளி தலைவர் நல்லதம்பி பரிசு வழங்கிப் பாராட்டினார்.
நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
நாமக்கல் சேலம் ரோட்டில், பொம்மைக்குட்டைமேடு பகுதியில் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 படித்து தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவி சபீதா 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி மோஷ்யாஸ்ரீ 600க்கு 584 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார். மாணவி சவுமிகாசாஸ்தா 583 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தைப் பெற்றுள்ளார். பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் விபரம்: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 11 பேர், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடத்தில் ஒருவர், கணிதத்தில் ஒருவர், வணிகவில் பாடத்தில் 7 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி தலைவர் நல்லதம்பி சால்வை அணிவித்து, பரிசு வழங்கிப் பாராட்டினார். பள்ளி இயக்குனர்கள் கனகராஜ், அல்லிமுத்து, மகேஸ்வரன், முத்துராஜா, ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் காளியண்ணன், உதவி தலைமை ஆசிரியர் பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பள்ளியில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu