பிளஸ் 1 தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 727 மாணவ, மாணவியர் ஆப்சென்ட்
பைல் படம்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம், திங்கள்கிழமை பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு துவங்கியது. இந்தத் தேர்வு, வரும், ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடக்கிறது.
அதேபோல், பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு இன்று துவங்கியது. அதில், 18 ஆயிரத்து 568 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். மேலும், 100 பேர் தனித்தேர்வர்களும் கலந்து கொள்கின்றனர். வருகிற ஏப்ரல் 5ம் தேதி வரை பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன.
பிளஸ் 1 வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு தேர்வு எழுதுவதற்காக, மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கும், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வில், முதன்மை கண்காணிப்பாளர்கள் 85 பேர், துறை அலுவலர்கள் 85 பேர், அறை கண்காணிப்பாளர்கள் 1,377 பேர், நிலையான படையினர் 220 பேர், வழித்தட அலுவலர்கள் 20 பேர் என, மொத்தம் 1,787 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று துவங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வில், மொழிப்பாடம் தமிழ் தேர்வு நடைபெற்றது.
மொத்தம் 17 ஆயிரத்து, 841 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 727 பேர் கலந்து கொள்ளவில்லை. வருகிற ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20 ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu