நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் நிலைய கடைகள் பொது ஏலம்: வியாபாரிகள் கடும் போட்டி

நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் நிலைய கடைகள்  பொது ஏலம்: வியாபாரிகள் கடும் போட்டி
X

Namakkal news-நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் ( கோப்பு படம்)

Namakkal news- நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் நிலைய கடைகள் ஏலத்தில் பல்வேறு வணிகர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். ஒரு கடை ரூ. 16 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மாத வாடகைக்கு ஏலம் போனது.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் நிலைய கடைகள் ஏலத்தில் பல்வேறு வணிகர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். ஒரு கடை ரூ. 16 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மாத வாடகைக்கு ஏலம் போனது.

நாமக்கல் மாநகராட்சியில் தற்போது, மெயின் ரோட்டில் இயங்கி வரும் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துவதற்கு போதிய இட வசதி இல்லை. மேலும், நகரின் மையத்தில் பஸ் நிலையம் உள்ளதால், பஸ்கள் நகருக்குள் வந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் புறநகரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையொட்டி, நாமக்கல் நகருக்கு, புதிய ரிங் ரோடு அமைய உள்ள, முதலைப்பட்டி அருகே புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் இந்த பஸ் நிலையம் திறப்பு விழா நடைபெற உள்ளது.

நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் 50 பஸ்கள் நிறுத்துவதற்காõன இட வசதியுடன், 2 ஹோட்டல்கள் உள்ளிட்ட 57 கடைகள் பஸ் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகள் மாத வாடகைக்கு விடுவதற்கான ஏலத்தை வெளிப்படையாக நடத்த வேண்டும் என வணிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து கடைகள் ஏலத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடை ஏலம் எடுப்பவர்கள் ரூ. 4 லட்சம் டெபாசிட் செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்டவர்கள் டெபாசிட் செலுத்தி, ஏலத்திற்காக விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் பஸ் நிலைய கடைகளுக்கான நேரடி பொது ஏலம் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. ஏற்கனவே ஏலத்திற்கு விண்ணப்பம் செய்தவர்கள், ஏலத்தில் கலந்துகொண்டு போட்டி போட்டு கடைகளை ஏலம் எடுத்தனர். ஒரு கடை ரூ. 16 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஏலம் போனது. மொத்தம் 33 கடைகளுக்கு ஏலம் முடிந்துள்ளது. மீதமுள்ள கடைகளுக்கு விரைவில் ஏலம் நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story