நாமக்கல் மாநகராட்சி: இம்மாத இறுதிக்குள் வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்க தொகை

நாமக்கல் மாநகராட்சி: இம்மாத இறுதிக்குள் வரி செலுத்தினால்  5 சதவீதம் ஊக்க தொகை
X
நாமக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை இம்மாத இறுதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்ததொகை வழங்கப்படுகிறது.

இம்மாத இறுதிக்குள் வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நாமக்கல் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள், நடப்பு 2024- 25 ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரியினை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முழுவதுமாக செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம். அவ்வாறு செலுதுத்ம்போது, இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி தொகையில் 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ. 5000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையலாம். மேலும் அனைத்து பொதுமக்களும், வணிகர்களும், நாமக்கல் மாநகராட்சிக்கு 2024 -25 நிதியாண்டு வரை செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், தொழில்வரி மற்றும் உரிமை கட்டணங்களை நடப்பு நிதியாண்டு வரை, நிலுவையின்றி உடனடியாக செலுத்தி, நாமக்கல் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story