நாமக்கல்லில் ஜனவரி 20 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. இளைஞர்கள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங். (கோப்பு படம்).
நாமக்கல்லில் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாதந்தோறும், மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி, ஜனவரி மாதத்துக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற 20 ஆம் தேதி, காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நபர்களை, நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம்.
முகாமின்போது, மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, டிப்ளோ, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் கம்ப்யூட்டரில் (ஜாவா, டேலி) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu