உடல் நலம் தேறிய நாமக்கல் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி மீண்டும் பிரச்சாரம்

உடல் நலம் தேறி மீண்டும் பிரச்சாரத்தை துவக்கிய நாமக்கல் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி.
நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட, பரமத்திவேலூரில், அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
கடும் வெப்பத்தால் உடலம் நலம் பாதிக்கப்பட்ட, நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி உடல் குணமாகி மீண்டும் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார்.
நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட வர்த்தக பிரிவு அமைப்பாளர் ராஹா தமிழ்மணி போட்டியிடுகிறார். அவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடுமையான வெயில் நேரத்திலும், அதிமுக மற்றும் கூட்டணி தொண்டர்களுடன் தினசரி கிராமம் கிராமமாக திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட, வேட்பாளர் தமிழ்மணிக்கு கடந்த 7ம் தேதி கடும் வெப்பத்தால் சிறுநீரக தொற்று ஏற்பட்டது. இதையொட்டி 2 நாட்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று ஓய்வெடுத்தார். அவருக்கு உடல்நிலை குணமடைந்ததால் 9ம் தேதி மீண்டும் தேர்தர் பிரச்சாரத்திற்கு திரும்பினார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில், அதிமுக தேர்தல் பிரச்சாரம், முன்னாள் அமைச்சரும் மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி தலைமையில் நடைபெற்றது. ப.வேலூர் எம்எல்ஏ சேகர் முன்னிலை வகித்தார். வேட்பாளர் தமிழ்மணி பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:-
நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என்று, சோசியல் மீடியாக்களில் திமுகவினர் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தினசரி காலை 5 மணி முதல், இரவு 10 மணிவரை, மதிய நேரம் கடும் வெயிலிலும், தொடர் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டதாலும், செல்லும் இடமெல்லாம், பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் ஆடிப்பாடி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் உடலில் சர்க்கரை அளவு திடீரென குறைந்தது. இதனால் உடல் சோர்வு ஏற்பட்டு, சிறுநீரகத் தொற்று ஏற்பட்டது. 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது பூரணமாக குணமடைந்துவிட்டேன். அதற்குள் தவறாக வதந்தியை பரப்பிவிட்டனர். இந்த நிலையில் ப.வேலூர் எம்எல்ஏ சேகருக்கும் எனக்கும் பிரச்சினை என்றெல்லாம் பெய்யை பரப்பி வருகின்றனர். நாங்கள் நீண்ட நாளைய நண்பர்கள், இருவரும் இணைபிரியா சகோதரர்கள்.
நான் ஆரோக்கியமாக மீண்டும் வந்துவிட்டேன். தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் தீவிரமாக ஈடுபட்டு, கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் தேர்லில் நிச்சயம் வெற்றிபெறுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சினிமாப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் அனுமோகன் ஆகியோர் வேட்பாளர் தமிழ்மணிக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu