/* */

நாமக்கல் அதிமுக வேட்பாளர் ஆட்டோ ஓட்டிச்சென்று தேர்தல் பிரச்சாரம்

நாமக்கல் அதிமுக வேட்பாளர் ஆட்டோ ஓட்டிச்சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் அதிமுக வேட்பாளர் ஆட்டோ ஓட்டிச்சென்று தேர்தல் பிரச்சாரம்
X

நாமக்கல் லோக்சபா தொகுதி, அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, பயணிகள் ஆட்டோவை ஓட்டிச்சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். 

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, பயணிகள் ஆட்டோவை ஓட்டிச்சென்று பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக ராஹா தமிழ்மணி போட்டியிடுகிறார். அவர் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து, பொதுமக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார். நேற்று, பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பயணிகள் ஆட்டோவை ஓட்டிச் சென்று பொதுமக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் ப.வேலூர் எம்எல்ஏ சேகர் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் ஆட்டோவில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக நாமக்கல் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, வள்ளிபுரம், கீரம்பூர், ஆண்டிப்பட்டி, ஆண்டிப்பட்டிப் புதூர், உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் தமிழ்மணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வீதி வீதியாகச் சென்று அதிமுகவினரையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். நாமக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் காந்திமுருகேசன் உள்ளிட்ட பலர் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 3 April 2024 11:25 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமான வாக்குப்பதிவு
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த பெண்...
 3. திருவண்ணாமலை
  சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
 4. ஆரணி
  ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
 5. குமாரபாளையம்
  ஈரோடு நாடாளுமன்ற தொகுதி குமாரபாளையத்தில் 74.06 சதம் ஓட்டுப்பதிவு
 6. இந்தியா
  சொந்தமாக ஒரு கார் கூட இல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா
 7. லைஃப்ஸ்டைல்
  பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் பயன்கள்
 8. லைஃப்ஸ்டைல்
  ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
 9. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
 10. ஈரோடு
  பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!