நாமக்கல்: சாலை விபத்து மற்றும் தற்கொலை சம்பவங்களில் 2 பேர் உயிரிழப்பு

நாமக்கல்: சாலை விபத்து மற்றும் தற்கொலை சம்பவங்களில் 2 பேர் உயிரிழப்பு
X
பரமத்திவேலூர் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்து மற்றும் தற்கொலை சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

பரமத்திவேலூர் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்து மற்றும் தற்கொலை சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது60) கூலித் தொழிலாளி. இவர் சோழசிராமணையில் உள்ள தனியார் செங்கல் தயாரிக்கும் தொழிற்கூடத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று, செங்கல் தயாரிக்கும் பணி முடிந்தவுடன் அங்கிருந்த ஜெயராமன் (65) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் நாகராஜை பின்னால் அமர வைத்துக்கொண்டு திருச்செங்கோடுட்டில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள வேபிரிட்ஜ் அருகே சென்றபோது, ஜேடர்பாளையத்தில் இருந்து -திருச்செங்கோடு நோக்கி எலச்சிபாளையம் அவிநாசிப்பட்டி காலனியைச் சேர்ந்த செங்கோட்டுவேல் (36) என்பவர் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தார். இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஜெயராமனுக்கும், பின்புறம் உட்கார்ந்து சென்ற நாகராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நாகராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஜெயராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புகாரின் பேரில், ஜேடர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து சரக்கு ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய செங்குட்டுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

தற்கொலை:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (36). இவர் திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் கேஷியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரஞ்சிதா (34). அப்பகுதியில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு லக்சனா(10) என்ற மகளும், பவின்( 8) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ரமேஷ் கடந்த 3 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். வேலை இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு மது போதையில் இருந்துள்ளார்.

கடும் விரக்தியில் இருந்த ரமேஷ் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் வீட்டின் கூரையில் இருந்த விட்டத்தில் தூக்கில் தொங்கினார். அதைப் பார்த்த அவரது மனைவி ரஞ்சிதா அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து, ரமேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்க கொண்டு சென்றனர் .அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரஞ்சிதா நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
ai based agriculture in india